இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. களத்தில் திமுக – அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர், மக்கள் நீதி மையம், ரஜினி, டிடிவி தினகரன் என்ற சூழல் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிக்கை வெளியிட்டார். இது பெரிதும் நம்பியிருந்த அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆங்காங்கே உள்ள பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரஜினி மக்கள் மன்ற நாலு மாவட்ட செயலாளர்கள் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மன்ற செயலாளர் திமுகவில் ஐக்கியமாயினர்.
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வந்த், தேனி ஆர் கணேசன் திமுகவில் சேர்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கே வி எஸ் சீனிவாசனும் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு க ஸ்டாலின் முன்னிலையில் நாலுபேரும் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.