வாட்ஸ்ஆப் வெப் மூலமாக பயன்படுத்தும் பயனர்களின் தொலைபேசி எண்கள் இணையத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பில் பயனாளர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு வணிக நோக்கில் அந்த தகவல்கள் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று அண்மையில் அறிவித்தது. இதற்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் பிப்ரவரி-8 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப்பை உபயோகப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதையடுத்து வாட்ஸ்அப் இன் புதிய கொள்கைக்கு பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே கொள்கையை மறுபரிசீலனை செய்வதாகவும், அதுவரை யார் கணக்கும் நீக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தங்கள் கொள்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் அனைவர் கணக்கிலும் பாலிசி விவரங்களை ஸ்டேட்டஸ் ஆக அப்டேட் செய்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் பயனாளர்களின் தொலைபேசி எண்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ் அப்பை கணினியில் வாட்ஸ்-அப் வெப் மூலம் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பயனாளர்களின் பாதுகாப்பு குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.