Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! பாதி படித்தால் போதும் – அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் 50% குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது. தற்போது பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் 50% குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா சூழல் காரணமாக ஆன்லைன் மற்றும் டிவி வழியில் தான் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக பாடத்திட்டத்தை அரசு குறைத்துள்ளது. புதிய (குறைக்கப்பட்ட) பாடதிட்டத்துக்கான BluePrint-ம் வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |