Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாமியார் செய்த தொழில்…. கேவலமா இருக்கு…. மருமகள் எடுத்த முடிவு….!!

கள்ள மது விற்பனை செய்த மாமியாரால் அவமானம் அடைந்ததாக கருதி மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலாம்பாள். இவர் கடந்த  20 ஆண்டுகளாக தனது வீட்டில் மறைத்து வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலாம்பாளின் மகன் பாலமுருகனுக்கும் சகுந்தலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கமலாம்பாள் வீட்டில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்தது அவருடைய மருமகள் சகுந்தலாவுக்கு தெரியவந்தது.

இதனால் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யக்கூடாது என்று தனது கமலாம்பாளை சகுந்தலா தடுத்துள்ளார். அதற்கு பிறகு திருந்திய கமலாம்பாள் அத்தொழிலை விட்டு உள்ளார். ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சூழலில் மருமகளுக்கு தெரியாமல் மீண்டும்  மது பாட்டில்களை வாங்கி வந்த கமலாம்பாள் வீட்டிற்கு அருகே உள்ள கொட்டகையில் மறைத்து வைத்து மது விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கமலாம்பாள் மது பாட்டிலில் மறைத்து வைத்திருந்த கொட்டகையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் கமலாம்பாளை  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தை அவமானமாக கருதிய சகுந்தலா  திடீரென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |