பெற்றோர் திட்டியதால் பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள சொக்குபிள்ளையார்பட்டியில் வசிப்பவர் முருகன். இவருடைய மகள் பெயர் துர்கா. இவர் அணைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டு வேலையை சரிவர செய்யாததினால் அவரது பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த துர்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் துர்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விளாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.