Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் தண்ணீர் வேண்டும்… நூதன முடிவு… சிக்கிய வாலிபர்கள்..!!!

தங்கள் கிராமத்துக்கு தண்ணீர் திருப்ப தடுப்பணையை உடைத்த 10 வாலிபர்கள் காவல்துறையினரிடம் சிக்கினார்கள். 

திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சாமியார் ஓடையின் குறுக்காக தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தடுப்பணை நிரம்பவில்லை. தற்போது சிறுமலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால், சாமியார் ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டு தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் முருகன்பட்டி கண்மாய்க்கு குறைவாக வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முருகன்பட்டி ஊரை சேர்ந்த சந்திரசேகரன், முத்துக்குமார், சிலம்பரசன் உள்ளிட்ட 10 வாலிபர்கள் தடுப்பணையில் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்தி தங்கள் கிராமத்துக்கு தண்ணீரை திரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சேதப்படுத்தப்பட்ட தடுப்பணையை பார்வையிட வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். மேலும் தடுப்பணையில் உடைக்கப்பட்ட இடத்தை மணல் மூட்டைகள் கொண்டு அடைத்தனர். மேலும் தடுப்பணையை சேதப்படுத்திய வாலிபர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்கள்.

Categories

Tech |