ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வந்தது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ஓட்டங்கள் எடுத்தது. அதற்கு பின்பு ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 44 ஓட்டங்கள் , சுப்மன் கில் 7 ஓட்டங்கள் ,சட்டிஸ்வர் புஜாரா 25 ஓட்டங்கள் மற்றும் அஜின்கியே ரஹானே 37 ஓட்டங்கள் என எடுத்து வெளியேறினர்.இதனால் இந்திய அணி கடும் தடுமாற்றத்தில் இருந்தது.
இதற்கிடையே ஒரு கட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்திருந்தால் 250 ஓட்டங்களுக்குள் தோற்கடித்து விடலாம் என ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் நினைக்க தமிழக வீரரான வாசிங்டன் சுந்தரும், ஷர்துல் தாகூரும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை பொறுமையாக எதிர் கொண்டனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷர்துல் தாகூர் சிறப்பாக விளையாடினார்.அவருக்கு இணையாக வாசிங்டன் சுந்தரும் விளையாட இருவரும் அரைசதம் அடித்தனர்.
இந்த ஜோடி 123 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் போட்டிருந்த போது ஷர்துல் தாகூர் 67 ஓட்டங்களிலிருந்து வெளியேற அவரை தொடர்ந்து விளையாடிய வாஷிங்டன் சுந்தரும் 62 ஓட்டங்களில் பவுலின் திரும்ப, கடைசியில் இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்கள் எடுத்தது.ஒருகட்டத்தில் இந்திய அணி 250 ஓட்டங்களை தாண்டுமா? என்று நினைத்த போது வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 300 ஓட்டங்களை கடந்ததால் இருவரையும் ரசிகர்கள் மற்றும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.