தமிழக அணி தொடர்ந்து தனது 4-வது வெற்றியை சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் பதிவு செய்துள்ளது.
12வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளது. கொல்கத்தாவில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழக அணி ஐதராபாத்துடன் விளையாடியது.
முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியினர் 7 விக்கெட்டுக்கு 182 ரன்களை எடுத்தனர். அதனை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 155 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் ஜெகதீசன் 78 ரன்களும் கேப்டன் தினேஷ் கார்த்திக் 40 ரன்களும் எடுத்து வெற்றி வாகை சூடினர். தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றிபெற்ற தமிழக அணிக்கு காலிறுதி போட்டியில் வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகமில்லை.