சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கிராமத்தில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, பின் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமியிடம் வீரபத்திரன் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வீரபத்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.