பேட்டரி பேருந்துகள் வாங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களின் வசதிக்காக அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலு பேட்டரி பேருந்துகள் வாங்கும் திட்டம் இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு பேட்டரி பேருந்துகள் வாங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக சட்ட பேரவை தேர்தல் நடக்க இன்னும் சிலமாதங்களே உள்ளன. எனவே 2021 தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்ற பிறகு பேட்டரி பேருந்து திட்டத்தை மீண்டும் வெற்றிகரமாக செயல்படுத்துவோம் எனவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.