தமிழக்தில் மக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகின்றது.
நாடு முழுவதும் கொரோனா பரவி மக்களை படாதபாடு படுத்தி வருகின்றது. இந்நிலையில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் முதலில் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டவர்களில் ஒரு சிலருக்கு ஒவ்வாமை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவதால் மக்கள் போட பயப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வரும் 2 ஆம் நாளில் சில இடங்களில் முன் களப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. கரூரில் 400 பேருக்கு ஊசி போடா திட்டமிடப்பட்டிருந்த நிலையில் வெறும் 105 பேர் மட்டுமே ஊசி போட்டுக் கொண்டனர். சென்னையிலும் சில முகாம்களில் மதியம் ஒரு மணிவரை ஒருவர்கூட வரவில்லை என்று கூறப்படுகிறது.