Categories
உலக செய்திகள்

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – அரசு அதிரடி…!!

மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதாக அபுதாபி நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் அரபு நாடான அபுதாபியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 18-ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் கொரோனா குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள்  திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |