பாத்ரூமில் இருந்து செல்போன் பேசுவதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று இப்போது பார்க்கலாம்.
உலகம் முழுவதும் செல்போன் மயமாகிய இந்த காலகட்டத்தில் கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெஸ்டன் பாத்ரூமை பயன்படுத்தும் பலரும் அங்கு எதற்கு சென்றார்களோ அந்த வேலையை முடிக்காமல், அங்கே நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதில் மட்டுமே மும்முரமாக இருக்கின்றனர். இப்படி நீண்ட நேரம் கழிப்பறையில் அமர்ந்துகொண்டு செல்போன் பயன்படுத்துவதால் கீழ் மலக்குடல் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிப்பதாக மருத்துவர் ஜார்விஸ் தெரிவித்துள்ளார்.
மூலம் வருவதற்கு கரணம் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம் மற்றும் உடல் சூட்டினால் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் ஆகும். ஒரு நாளில் நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்கார்வதால் மட்டுமே வராது. தினமும் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது தால் மட்டுமே மூலத்தை உண்டாக்குகிறது.
இப்படி பாத்ரூமில் அமரும் பழக்கம் செல்போன்களால் மட்டுமல்ல, இதற்கு முன் பிடித்த புத்தகத்தை பாத்ரூமில் அமர்ந்துகொண்டு படிக்கும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. மேலும் மூலம் வருவதற்கு முன் அறிகுறிகளான ஆசனவாயில் எரிச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காதது போன்ற உணர்வு ஆகியவை ஆகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் எடுத்து கொள்ளுதல், தினமும் உடற்பயிற்சி, கழிப்பறைக்கு செல்போன் எடுத்துச் செல்வதை முக்கியமாக தவிர்த்தல் போன்ற விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்.