இளைஞர் ஒருவர் மது குடிக்க பணம் தராததால் தனது தாத்தாவை அடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே வடக்கு சேர்பெட்டியை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பெற்றோர் குடிக்க பணம் தராததால் தன்னுடைய 85 வயது தாத்தாவை மரக் கட்டையால் சரமாரியாக அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய தாத்தாவை கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் சடலத்தை கைப்பற்றி உள்ளனர். பின்னர் தப்பி ஓடிய ராஜேஷ் குமாரை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். மது குடிக்க பணம் தராததால் தாத்தாவை பேரன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.