மது விற்பனை செய்து கொண்டிருந்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ரகசியமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வரும் நவாஸ் என்பவர் மது விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.