Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

தவிக்க விட்டுப்போன மனைவி…. மகள்களோட திருமணம்…. பொறுப்பை உதறிவிட்டு தந்தை எடுத்த முடிவு…!!

கூலிதொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள முத்து நகரை சார்ந்தவர் வேலாயுதம்-விஜயா தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு விஜயா இறந்துவிடவே கூலித் தொழிலாளியான வேலாயுதம் மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாத காரணத்தினாலும் மனைவி இறந்து போன வேதனையாலும் மிகவும் மன வேதனையில் இருந்து வந்தார்.

சம்பவம் நடந்த அன்று மனைவியின் ஞாபகம் வந்ததால் வேதனையடைந்த வேலாயுதம் குடித்துவிட்டு தன் வீட்டின் பின்புறத்தில் உள்ள பகுதியில் தூக்குப் போட்டுக் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை பார்த்த அவருடைய மகள்களும் அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு வேலாயுதத்தை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வேலாயுதம் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |