Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எந்த கட்சியிலும் சேர்ந்துகோங்க…. இங்க ராஜினாமா பண்ணனும்…. ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கை….!!

ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்தவர்கள் எந்த கட்சியிலும் இணையலாம் என அம்மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்பு தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Categories

Tech |