அரசு ஊழியர்கள் தங்கள் துறை சார்ந்த புகார்களை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் நபர்கள் தங்கள் துறை சார்ந்த புகார்களை வாட்ஸ்அப் குழுக்களில் பகிரக்கூடாது. மீறினால் அவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், துறை சார்ந்த புகார்களை மேல் அதிகாரியிடம் முறையாக தெரிவிக்கவேண்டும். மாறாக வாட்ஸ்அப் குழுக்களில் பகிரக்கூடாது. அவ்வாறு பகிர்வர்கள் மீது சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.