அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் அமைச்சர் உட்பட 6 பேர் பங்கேற்கவில்லை.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியினரின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விகள் குறித்தும் , கட்சியின் தலைமை விவகாரம் மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது பற்றிய பல்வேறு முடிவுகள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்த கூட்டத்தில் அதிமுக_வின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என மொத்தம் 6 பேர் பங்கேற்கவில்லை.
இது குறித்து அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூறுகையில், உடல்நல குறைவால் கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அவர்கள் பங்கேற்கவில்லை. அதே போல அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், சி.வி. சண்முகம் ஆகியோர் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.