அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிமுகவினருக்கு செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்ட்து.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிகப்படியான இடங்களில் தோல்வியுற்ற அதிமுக அதிஷ்டவசமாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து அதிமுகவில் தலைமை குறித்து பல்வேறு நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து கூற ஆரம்பித்தார்கள். அதிமுகவிற்கு ஒரு தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக MLA தொலைக்காட்சியில் பேட்டி முதற்கொண்டு அளிக்க தொடங்கினார்கள்.
இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து அதிமுக_வின் தலைமை அனைத்து தொண்டர்களுக்கும் , நிர்வாகிகளுக்கு கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேசவேண்டாம் என்ற கட்டுப்பாட்டை விதித்தது. மேலும் நிர்வாகிகளை ஆலோசனை கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சியின் தலைமையகத்தில் இன்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விகள் குறித்தும் , கட்சியின் தலைமை விவகாரம் குறித்த முக்கிய முடிவுகள் பேசப்பட்டதாக தெரிகின்றது. அந்த வகையில் இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. ஒன்றரை மணிநேரம் நடந்த இந்த கூட்டத்தில் அதிமுக_வினர் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்காதது குறிப்பிடத்தக்கது.