வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் அடுத்த 2024 வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்களத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும் மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு இரக்கம் காட்டவில்லை.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள 2014 ஆம் ஆண்டு வரை கூட போராட தயார் என்று விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார். நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால் தொடர்ந்து போராட விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.