பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி டுவிட்டரில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார் .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது . நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . இறுதிப் போட்டிக்கு தேர்வான 5 போட்டியாளர்களில் சோம் 5வது இடத்தையும், ரம்யா 4வது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தனர் . இறுதியில் பாலா மற்றும் ஆரி இருவரையும் கமல்ஹாசன் மேடைக்கு அழைத்து வந்தார் .
எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே….#Aari #AariArujunan #BiggBossTamil4@narayan_aadhi @shortfundly_ind pic.twitter.com/NWvyL9kIOv
— Aari Arujunan (@Aariarujunan) January 17, 2021
பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் ஆரி டைட்டிலை வென்றார் . இந்நிலையில் டைட்டிலை வென்ற ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் பதிவை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் கோப்பையை கையில் பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது இணையத்தில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.