Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி-65’ மாஸ் அப்டேட்… விஜய்க்கு வில்லனாகும் அஜித் பட வில்லன்… யார் தெரியுமா?…!!!

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‌. இதையடுத்து நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் . இந்த படத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

Arun Vijay's cop film titled Sinam- The New Indian Express

மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது ‌. இந்நிலையில் ‘தளபதி 65’ படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்து அசத்திய அருண் விஜய் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |