நடிகர் விஷ்ணு விஷாலின் ‘இன்று நேற்று நாளை 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மியா ஜார்ஜ் , கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர் . டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது .
TRAVELLING 'BACK IN TIME'… SEE YOU ALL IN 'THE FUTURE'…#IndruNetruNaalai2
movie pooja held today..
Back with my buddies @icvkumar #karunakaranScript by @Ravikumar_Dir
Directed by @karthikPonrajSP
Music @GhibranOfficial
Need ur love and support as always:) pic.twitter.com/0lO9wsvxyS
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) January 18, 2021
இயக்குனர் ஆர்.ரவிக்குமார் ஸ்கிரிப்ட் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் இயக்குகிறார் . தயாரிப்பாளர் சிவி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார் . இந்நிலையில் ‘இன்று நேற்று நாளை 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஷ்ணு விஷால், கருணாகரன் ,இயக்குனர் ஆர்.ரவிக்குமார், கார்த்திக் பொன்ராஜ், தயாரிப்பாளர் சிவி குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.