கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த விழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருவதுண்டு.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பற்றி ராமேஸ்வரம் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தைக்கும் சிவகங்கை மாவட்ட ஆயருக்கும் யாழ்ப்பாணம் மறைமாவட்ட மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் “பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதால் இந்த ஆண்டு நடைபெற இருந்த கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த திருவிழா வழக்கம் போல் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.