Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் ‘D43’ … படத்தில் இணைந்த ‘சூரரைப்போற்று’ பிரபலம்… வெளியான அறிவிப்பு…!!!

நடிகர் தனுஷின் ‘D43’ படத்தில் சூரரைப்போற்று பட நடிகர் இணைந்துள்ளதாக  படக்குழு அறிவித்துள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் , கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது ‌. இதையடுத்து தனுஷின் 43 வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக  மாளவிகா மோகனன் நடிக்கிறார் . சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கிருஷ்ணகுமார் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . இவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்து அசத்தியவர். மேலும் தனுஷின் 43 வது படத்தில் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக நடிகர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |