ஓடிக்கொண்டிருந்த பஸ் கண்ணாடி மீது கல்லை வீசியதால் திருக்கோவிலூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் நேற்று மாலை அரசு பஸ் திருக்கோவிலூர் பகுதியில் இருந்து நாசர்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தது அந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் கல்லை எடுத்து பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி மீது வீசினார். இதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் கூச்சலிட்டதையடுத்து ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்ம நபரை தேடினர். ஆனால் அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடி விட்டதால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.