Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுவே வாடிக்கையாகி போச்சு…. டயர் உற்பத்தி ஆலையில் தீ விபத்து…. திருவள்ளூரில் பரபரப்பு….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள  சிப்காடில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகிறது. அதில் எண்ணெய் உற்பத்தி, டயர் உற்பத்தி ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில்,தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட், தேர்வாய், பொன்னேரி பகுதியை சேர்ந்த தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |