Categories
ஆன்மிகம் உலக செய்திகள்

“கொரோனா அச்சுறுத்தல்” இந்த முறை திருவிழா கிடையாது…. ஏமாற்றமடைந்த இரு நாட்டு பக்தர்கள்….!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவிலில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் இந்தியா, இலங்கையை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சிலுவைப்பாடு, திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுவார்கள்.

கச்சத்தீவில் வரும் பிப்ரவரி 26,27 ஆம் தேதிகளில் திருவிழா நடைபெறும் என்று இலங்கை அரசு முடிவு செய்தது. அதில் இரு நாடுகளின் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும்,தேவாலய பங்குக்கு உட்பட்ட 150 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால் இந்த ஆண்டு திருவிழா நடைபெறாது என்று இலங்கை யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |