சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் நான்கு பேர் சூதாடி கொண்டிருந்தனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் 4 பேர் சூதாடி கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நான்கு பேரும் அதே பகுதியில் வசித்து வரும் சரவணன், சுரேஷ், காவேரி மற்றும் ஆதி என்பது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.