Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிக்ஸர் விளாசிய… வாஷிங்டன் சுந்தரின் கெத்தான ரியாக்சன்… வைரலாகும் வீடியோ…!!

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கெத்தாக சிக்ஸர் விளாசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை  தி காபாவில் எதிர்கொண்டது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது.  அதன்பிறகு ஆடிய இந்திய அணி 336 ரன்களை முதல் இன்னிங்சில் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து அபாரமாக விளையாடி இந்திய அணியின் இலக்கை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்தனர்.

இதனால் இவர்கள் இருவருக்கும் முன்னணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயனின் ஓவரில் சிக்சர் விளாசிய வாஷிங்டன் சுந்தர் நிமிராமல் கெத்தாக கீழே பார்த்துக் கொண்டிருந்தார். இதனை கண்ட பலரும் அவரின் ஸ்டைலை பற்றி பேசி வந்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |