Categories
லைப் ஸ்டைல்

மணத்தக்காளியின் நன்மைகள் என்னனு தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இப்போது பார்க்கலாம்.

மணத்தக்காளி மருத்துவ குணமுள்ள கீரைவகை ஆகும். இதில் கறுப்பு, சிவப்பு என்ற இரு இனங்கள் உண்டு. இந்த கீரையைமட்டுமல்லாமல், மணத்தாக்காளிக் காய்களையும், காய்களை வற்றலாக்கியும் பயன்படுத்துவர். இரண்டு நிற வேறுபாட்டால் தனித்தனியே சிற்சில வேறுபட்ட குணங்கள் உள்ளது.

இதன் காய்கள் சிலேஷ்மரோகமும், இலைக்கு நாப்புண்ணிற்கும் பயன்படும்.

காய வைத்த வற்றல் நோயாளிகளுக்கு உகந்தது.

மணத்தக்காளிக் கீரையை துவரம்பருப்பு/பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டால், உட்கூடு, வாய்புண், ஆசனக்கடுப்பு, நீர்ப்பைக் கொதிப்பு, தாகம், ஆகியவை போகும்.

இதன் இலையை அரைத்து ஆசனத்தில் வைத்துக்கட்ட மூலம் மற்றும் புண் நீங்கும்.

இதன் இலைச்சாற்றில் வேளைக்கு 3/4 > 1 அவுன்சு வீதம் தினமும் 3 வேளைக் கொடுத்துவர நீர் தாராளமாக இறங்கும்.

இதன் உலர்ந்த இலைகள் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நீங்கும்.

Categories

Tech |