மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு கூறியவரைத் தாக்கிய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழுக்குமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. அந்த சமயம் அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி மற்றும் அஜீத் என்று இருவர் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதி வழியாக வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளியான வல்லரசு என்பவர் மெதுவாக செல்லுமாறு அவர்களிடம் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பெரியசாமி மற்றும் அஜீத் இருவரும் வல்லரசை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் காயமடைந்த வல்லரசு புகார் அளித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெரியசாமி மற்றும் அஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.