சீனாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டோங் மாகாணத்தில் யன்டாய் நகரில் குவிக்சியா என்ற பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. கடந்த வாரம் அந்த சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் சுரங்க பணியில் இருந்த 22 தொழிலாளர்கள் அதில் சிக்கி கொண்டனர். அவர்களை தொடர்பு கொள்வதற்கு எந்தவித வாய்ப்புகளும் இல்லை என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
சிக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்பதற்காக 300க்கும் மேற்பட்டோர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த 12 பேர் உயிருடன் இருப்பதாக மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் மீதமுள்ள 10 பேர் எப்படி உள்ளார்கள் என்று இன்னும் தெரியவில்லை.