Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடப்பட்ட பின்னர் ஊழியர் இறப்பு… கிளம்பும் சர்ச்சை..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் நேற்று மாலை நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இது தொடர்பாக என்டிடிவி யில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சனிக்கிழமை மாலை இவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இரவு நேர வேலையும் பார்த்து வந்துள்ளார். தொடர்ந்து ஞாயிறு மதியம் இவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, உடனே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பு மருந்து காரணமாக இருக்குமோ என்று பலரும் சந்தேகித்து வருகின்றன. தடுப்பூசி போடுவதற்கு முன்னரே இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வரும் போதுதான் அது என்ன காரணம் என்பது தெரிய வரும்.

Categories

Tech |