முன்னாள் துணை தாசில்தார் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வானமாமலை நகரைச் சார்ந்தவர் முன்னாள் துணை தாசில்தார் ரவீந்திரன். இவர் பொங்கல் விடுமுறையை கழிப்பதற்காக ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று காலை அவர் வீடு திரும்பியது அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது 65 பவுன் நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரொக்கப்பணம், நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது,
உடனடியாக அவர் எஸ்எஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.