இன்றைய பஞ்சாங்கம்
19-01-2021, தை 06, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 10.59 வரை பின்பு வளர்பிறை சப்தமி.
உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு ரேவதி.
அமிர்தயோகம் காலை 09.54 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் – 19.01.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சனைகள் இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரையம் இருக்கும். பயணங்களில் கவனம் வேண்டும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். உற்றார் உறவினர் வழியில் அனுகூலம் இருக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்ய வேண்டும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்கும். குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமுக உறவு இருக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடக்கும்.நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல கூடும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மாற்று கருத்தால் மன சங்கடம் இருக்கும். பொருளாதார நிலை சுமாராக அமையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வரும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு மனக்குழப்பம் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் இருக்கும்.உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். சுபகாரியம் தவிர்க்க வேண்டும். உதியோக ரீதியில் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் ஒற்றுமை உண்டாகும்.நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணவரவு சீராக இருக்கும்.
துலாம்
உங்கள் ராசிக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிலும் சாதகமான பலன் உண்டாகும். உத்யோக வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்க பெறும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லக் கூடும். திடீர் பணவரவு இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
விருச்சிகம்
உங்கள் இராசிக்கு உத்தியோகத்தில் கூட்டாளிகளுடன் மன கசப்பு இருக்கும். சுப காரியங்களில் அனுகூலம் இல்லாத பலன் இருக்கும். தேவையில்லாத செலவுகளால் சேமிப்புகள் கரையும்.எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சனை நீங்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சுமாராக அமையும். உறவினர்களால் சுப செலவு இருக்கும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். குழந்தைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடு நீங்கும். தொழிலில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் காலதாமதம் இருக்கும். வீட்டில் செல்லும் பயணங்களில் அலைச்சல் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிடைக்கும்.தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உறவினர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். குழந்தைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்த உயர்வுகள் உண்டாகும்.