திமுக வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று திமுக எம்பி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஜெகத்ரட்சகன் எம்பி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கைப்பற்றும் எனவும், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார் எனவும் கூறியுள்ளார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெரிய மாற்றம் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.