நபர் ஒருவர் தாம்பத்ய குறைபாடை மறைத்து திருமணம் செய்த்துள்ளதால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வசந்தன். இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகளை வீட்டில் பெற்றோர்கள் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் தன்னுடைய மகனின் தாம்பத்திய குறைபாட்டை மறைத்து சென்னையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணம் ஆன சில நாட்கள் கழித்து பெண் வீட்டார்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பெண்வீட்டாரின் புகாரின் பேரில் காவல்துறையினர் வசந்தனை கைது செய்துள்ளனர். மேலும் அவர் திருமண செலவுக்காக ரூபாய் 20 லட்சத்தையும் பெண் வீட்டார் மீது சுமத்தி விட்டதாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.