நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் தயாராகியுள்ளது . இந்தப் படத்தை A1 பட இயக்குனர் ஜான்சன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சஷ்டிகா ராஜேந்திரன், அனிகா செட்டி, மாருதி பிரித்திவிராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Here u go https://t.co/VpJCw7Xq7p#ParrisJeyarajTrailer#JohnsonK @Music_Santhosh @Kumarkarupannan #LarkStudios @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @proyuvraaj
— Santhanam (@iamsanthanam) January 18, 2021
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது . இந்நிலையில் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது . கானா பாடகராக இருக்கும் சந்தானத்தின் காதல் மற்றும் திருமணம் பற்றிய கதை இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது . மேலும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.