Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை… இதை புகாராக பாக்காதீங்க… ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் எதுவும் புகார்கள் அல்ல என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய சர்வதேச பெண்கள் அமைப்புகள் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் முயற்சியால் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், இழப்பீடு, வசிப்புரிமை, பாதுகாப்பு கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் இச்சட்டப்பிரிவில் உள்ள விண்ணப்பங்கள் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது, பாதுகாப்பு மீறல் மட்டுமே பிணையில் வெளிவரமுடியாத குற்றமாகும் என்று குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இழப்பீடு போன்ற கோரிக்கைகள் உரிமையில் சம்பந்தப்பட்டது என்றும் உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது என கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.

மனுதாரர்கள் நிவாரணம் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், இக்கோரிக்கைகளை மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் எதுவும் புகார்கள் அல்ல என்று கூறினார். இதுபோன்ற விண்ணப்பங்களின் போது சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பக் கூடாது என்றும் நோட்டீஸ் மட்டுமே அனுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |