மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு, அசோக் நகர் 3வது தெருவில் சந்தேகப்படும் படியாக ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அவருக்கு வந்த ரகசிய தகவலின் காரணமாக காவலர்களுடன் அவர் அப்பகுதிக்கு விரைந்து சென்றார்.சந்தேகத்திற்கிடமான அந்த கும்பல் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து சுற்றிவளைத்தனர்.
அங்கு பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த ஆனையூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சூரிய பிரகாஷ் (20), அருண் பாண்டி என்ற கௌதம் (21), விளாங்குடி கரிசல் குலத்தை சேர்ந்த பாரதி (20), தர்மராஜ் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இக்கும்பலில் சம்பந்தப்பட்ட கரிசல் குளத்தை சேர்ந்த வேட்டையன் என்ற அய்யங்காளை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தப்பி ஓடிய வேட்டையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும கும்பலிடம் இருந்து பயங்கர ஆயுதங்களை கைப்பற்றி, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.