மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது நடிப்பினால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார். ரசிகர்களால் செல்லமாக தல என்று இவர் அழைக்கப்படுகிறார். இவரது படம் மற்றும் ட்ரெய்லர் ஏதாவது ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் படம் குறித்த எதையாவது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது ரசிகர்களின் வாடிக்கையான செயல். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள “நேர் கொண்ட பார்வை ட்ரெய்லர்” இன்று மாலை ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் முன்பே #NerKondaPaarvaiTrailer என்ற ஹேஸ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
நடிகர் அமிதா பச்சன் நடித்த பாலிவுட் திரைப்படமான “பிங்க்” தமிழில் நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமிழில் முதல் முறையாக நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஓன்று படத்தை இயக்கிய ஹெச். வினோத் இயக்குகிறார். மறைந்த ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். விக்ரம் வேதா படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். பிங்க் படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங்கும் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே நிறைவடைந்து விட்டது. இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நேர் கொண்ட பார்வை ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.