Categories
உலக செய்திகள்

மாயமான இளம்பெண்… காவல்துறையினர் வெளியிட்டுள்ள… முக்கிய தகவல்…!!

இளம்பெண் ஒருவர் மாயமான சம்பவம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை காவத்துறையினர் வெளியிட்டுள்ளனர். 

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் கடந்த 11ஆம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் அப்பெண் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த தகவல் ரொறன்ரோ காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 26 வயதுடைய Susan Felics என்ற இளம்பெண் கடந்த மாதம் 11ம் தேதி அன்று மாயமாகியுள்ளார்.

அதற்கு முந்தைய தினம் அவருக்கு தெரிந்த சிலர் உடன் இறுதியாக பேசியுள்ளார். மேலும் காவல் துறையினர் தற்போது Susan ரொரன்ரோவில் தான் இருப்பார் என்று கருதியுள்ளனர். மேலும் இந்தபெண் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் மற்றும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் குறித்து தகவல் கிடைத்தவர்கள் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Categories

Tech |