பயங்கரவாத ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை காவல்துறையினர் கூடல் நகர் அருகே அதிரடியாக கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கூடல் நகர் பகுதியை சேர்ந்த அசோக் நகர் தெருவில் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக ஒரு கும்பல் இருந்தது என காவல்துறை உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அங்கிருந்த கரிசல் குலத்தை சார்ந்த பாரதி, தர்மராஜ், ஆணையூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சார்ந்த சூரிய பிரகாஷ், அருண் பாண்டி ஆகியவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் கரிசல் குலத்தைச் சார்ந்த வேட்டையன் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடியதால் காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் எந்த நோக்கத்துடன் ஆயுதங்களை வைத்துக்கொண்டு அங்கு தங்கி இருந்தனர் என்பது பற்றி காவல்துறையினர் பல பரிமாணங்களில் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.