நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் தினத்தில் மாநாடு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
#PathuThala #ObelinKrishna #Studiogreen#SilambarasanTR45 #studiogreen20#pathuthalai #pathuthalaiofficial#STR#SilambarasanTR #GauthamKarthik #Priyabhavanishankar #Teejay pic.twitter.com/4gwKtXGTpK
— Silambarasan TR (@SilambarasanTR_) January 18, 2021
இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல படத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து இளம் நடிகரான கௌதம் கார்த்திக் ,நடிகை பிரியா பவானி சங்கர் ,’அசுரன்’ பட பிரபலம் டிஜே அருணாச்சலம், நடிகர் கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.