Categories
பல்சுவை வானிலை

“இரண்டு நாட்களுக்கு அனல் காற்று” வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசிய பின்பு வெயிலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் கடந்த 8_ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு  எப்போதும் இல்லாதவாறு வழக்கத்தை விட தாமதமாக தொடங்கியது.  இதையடுத்து  கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவாக்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்க்கு ‘வாயு’ புயல் என்று பெயர் சூட்டப்பட்டு , இது இன்று   குஜராத்தில் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்ட்து. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் ,

Image result for அனல் காற்று

அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல், குஜராத் அருகே இன்று பிற்பகலுக்குள் கரையை கடந்துவிடும். தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி, தேனி, நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய  வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, வேலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்.இந்த 2 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் தமிழகத்தில் குறையும்.

Categories

Tech |