மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்குனரகமானது மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் வருகிற 20-ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவர்களும் கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து எந்த நபரும் சட்ட விரோதமாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதன் பொருட்டு மாணவர்களின் நீட்தேர்வு போன்ற சான்றிதழ்களை கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.