பிரபல நடிகர் விமலின் மீது போலீசில் வழிபட்டு தலத்தை இடித்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே பன்னாங்கொம்பு என்ற ஊர் நடிகர் விமலின் சொந்த ஊராகும். அவரது வீட்டுக்கு முன் விளக்குத்தூண் அமைத்து சிலர் வழிபட்டு வந்துள்ளனர். அந்த வழிபாட்டு தலத்தை 7 பேர் அடங்கிய கும்பல் ஜேசிபி கொண்டுஇடித்துள்ளனர். இதையடுத்து அந்த கும்பலில் நடிகர் விமலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஊர் மக்கள் விமலின் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.