கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரதாணடவமாடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மக்களுக்கும் தற்போது போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்திரபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு இருவர் சில மணிநேரங்களில் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உபியில் இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்றும் கர்நாடகாவில் இறந்த மற்றொரு நபரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.